தற்போதய செய்திகள்

Cresco

இந்த முறை நடந்துவிட்டது, Cresco ஆரம்பம் ஆகிவிட்டது. La Chaux-de-Fonds-வில் இருக்கும் குழந்தைகள் வளர்ப்பகத்தின் குழு விருப்பத்தால், இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சிறு குழந்தைகளின் வளர்ப்பகம் கட்டமைப்புகளில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குழந்தைகள் வரவேற்கப்படுகிறார்கள். பன்முகத்தன்மை மற்றும் உள் கலாச்சாரம் அவசியமான கருத்து அபிவிருத்தி வேண்டும் என்று, கல்வியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக, அதனுடைய உள்ளடக்கத்தை வழங்குவதற்கு, கல்வியாளர்கள் அவர்களின் வேலை மூலமாக மற்றும் தன்னார்வலராக முன் வந்து, ஈடுபடுகிறார்கள். இதற்கு அனைவரும் பங்கேற்றார்கள்: கருத்தாக்கத்திலிருந்து (Solange Mantegani, Christophe Cedolin), உள்ளடக்க தயாரிப்பு (Joanna Domingos, Saskia Pellaton), பாடுதல் (Caroline Bolat, Clovis Brahier, Noah, Maël et Tania Cedolin), பல்லூடகம் உருவாக்கம் (Amaël Domon), மற்றும் புத்தகம் தயாரித்தல் வரை (Solange Mantegani, Fabienne et Oranne Vögeli) அனைவரும் பங்கேற்றார்கள். கல்விக்குழு மற்றும் குழந்தைகளின் முழு ஒத்துழைப்பும் பங்கேற்பும் இல்லை என்றால், இவை எதுவும் சாத்தியமில்லாமல் இருந்திருக்கும். Neuchâtel மாநிலம் மற்றும் சுவிஸ் அரசாங்கம் ஆதரவால், La Chaux-de-Fonds நகரம் சேர்ந்த இந்த குழந்தைகள் வளர்ப்பகம் திட்டம், மாநில ஒருங்கிணைப்பு திட்டம் மூலமாக (Programme d’intégration cantonal – PIC), மாநில பாலர் குழந்தைகள் பராமரிக்கும் அனைத்து கட்டமைப்புகளின் பங்களிப்பை வரவேற்பதன் மூலம், இந்த திட்டம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிமாற்றம் மற்றும் பன்முகத்தன்மை, அறிவையும், திறமையும் உருவாக்குகின்றன என்ற கருத்தை நாம் ஒன்றாக சேர்ந்து இந்த திட்டத்திற்கு உணர்வை கொடுக்கின்றோம்.

குழந்தைகளின் இடை கலாச்சாரத்தைப் பராமரிக்கும் கட்டமைப்பு

Cresco- வின் அர்த்தம், வளர்வது. சிறு குழந்தைகளின் வளர்ப்பகம் சம்மந்தப்பட்ட கட்டமைப்புகளில், பன்முகத்தன்மையால் குறிக்கப்பட்டும் இடங்களாக இருக்கும். பன்முகநாடுகள், கலாச்சாரங்கள், பயணங்கள் மற்றும் பல விதமான வாழ்க்கை அனுபவங்களும் இருக்கும். சரியான முறையில் வளர மற்றும் பன்முகத்தன்மையை கற்றுக்கொள்ள, சிறுவர்களுக்கும் மற்றும் குடும்பங்களுக்காகவும், Cresco இணையத்தளத்தில் பாடல்கள், காணொலிகள், புத்தகங்கள் மற்றும் இன்னும் பல விஷயங்களை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

Cresco Neuchâtel

இவை எல்லாம் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த இணையத்தளம் உங்களை வரவேற்கிறது!

Conception: PointK et Benjamin Floch